நீர் நிரம்பாத அதிசய கிணறு!

திருநெல்வேலி மாவட்டம் ஆயன்குளம் பகுதியில் எவ்வளவு நீர் சென்றாலும் நிரம்பாத அதிசய கிணறு இருப்பதாக தகவல் இருந்தது. இதனைப் பார்ப்பதற்கு ஏராளமானோர் அங்கு குவிந்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொட்டித்தீர்த்த பருவமழையின் காரணமாக அப்பகுதிக்கு கோட்டைக்கருங்குளம் நம்பியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன்படி, அங்கு 50 கன அடி நீர் இந்த கிணற்றினுள் பாயும்போதும் கிணறு நிரம்பாமல் இருப்பது தெரியவந்தது.

இதனையறிந்த நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சமீபத்தில் இந்த கிணற்றை நேரில் ஆய்வு செய்தார். அதுமட்டுமில்லாமல், கிணறு நிரம்பாத காரணத்தை கண்டறிய சென்னை ஐஐடி குழுவினர் நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.


இதனை தொடர்ந்து, சென்னை ஐஐடி குழு ஆய்வு செய்துவந்த நிலையில், இன்று குழுவின் புவியில் துறை பேராசிரியர் வெங்கட்ராமன் கூறியதாவது:

ஆயன்குளம்   பகுதியில் இருப்பது ஒரு அதிசய கிணறு. இதுப்போல சுற்றுவட்டாரத்தில் மேலும் 14 கிணறுகள்   இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பூமிக்கு கீழ் சுண்ணாம்பு பாறைகள் உள்ளதால் நிலத்துக்கு அடியில் செல்லும் நீர் வேதிவினையாற்றி பல இடங்ககளில் ஓடைகள், குகைகள் போன்ற அமைப்பு உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் சிறிய ஓடைகளாக உருவாக்கி பின்னர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் பெரிய ஓடைகளாக மாறும். இதனால் பூமிக்கு மேலே தண்ணீர் சேமித்து வைப்பது போன்று பூமிக்கு கீழையும் சேமிக்க முடியும்.

இதனால் சுற்று வட்டார விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள் என்று நிபுனர் குழுவின்   ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த பகுதியில் பிரமாண்டமான நீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தமுடியும் என்றும் அவர் கூறினார்.

 

ARTICLE BY : பா .கோமதி தேவி