கோவை மாநகராட்சி பள்ளி மாணவி இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ்சில் இடம் பிடித்து சாதனை

கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளியில் யு.கே.ஜி படித்து வரும் மாணவி, இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ்சில் இடம் பிடித்துள்ளார்.

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் ரமேஷ், சாலினி தம்பதியினர். இவர்களது ஐந்து வயது மகள் இனியா யு.கே.ஜி படித்து வருகிறார். அபார நியாபக திறன் கொண்ட இந்த சிறுமி, அனைத்து வகை காய்கறிகள், பழங்கள், நிறங்கள் மற்றும் பொருட்களின் பெயர்களை மிகச்சரியாக கூறுகிறார்.

இந்த நிலையில் 10 நிமிடங்களில் குழந்தைகளுக்கான 50 பாடல்களை ஆங்கிலத்தில் பாடி அசத்தியுள்ளார். இவரது அபார நியாபகத்திறனை இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் அங்கீகரித்துள்ளது.

இதுகுறித்து சிறுமி இனியா கூறுகையில், எனது பள்ளி ஆசிரியர்களும், வீட்டில் எனது பெற்றோரும் அளித்த பயிற்சி காரணமாக என்னால் அனைத்து பாடல்களையும் நியாபகம் வைத்துக்கொள்ள முடிகிறது. இதற்கு அடுத்து பல்வேறு சாதனைகளை செய்ய ஆசை என்றார்.