கலைநிகழ்ச்சிகளுடன் இன்று நிறைவு பெறும் செஸ் ஒலிம்பியாட்!

சென்னை மாபல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்றுடன் (ஆகஸ்ட் 09) நிறைவு பெறுகிறது. நேரு உள்விளையாட்டரங்கில் கடந்த 29 ஆம் தேதி தொடங்கிய இதன் துவக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்பித்தார்.

நேரு உள்விளையாட்டரங்கில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மாலை 6 மணிக்கு தொடங்கி
கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற உள்ளது. விழாவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்குகிறார்.

மேலும் இதில் சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கலந்துகொள்ள இருந்த நிலையில், அவர் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வண்ணமயமான நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளை 600 கலைஞர்கள் வழங்க உள்ளதோடு, விழாவுக்கான ஏற்பாடுகள் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளன. தொடக்க விழாவை ஒருங்கிணைத்த இயக்குநர் விக்னேஷ் சிவன், நிறைவு நாள் விழாவையும் ஒருங்கிணைக்கிறார்.