கே.பி.ஆர் கல்லூரியில் மாணவர் புதுமுக வகுப்பு

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் மாணவர் புதுமுக வகுப்பு நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் பாலுசாமி தலைமை வகித்தார். வணிகவியல் துறைப்புல முதன்மையர் குமுதாதேவி வாழ்த்துரை வழங்கினார். வணிகவியல் துறைத் தலைவர் சாந்தி வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்விற்கு கோவை மாவட்டம் துணை ஆட்சியர் செல்வன சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்: வாழ்க்கையில் வெற்றி பெற எவ்வாறு தன்னை சீர்மை படுத்திக் கொள்ள வேண்டும் என்பதனை தன் அனுபவங்களைக் கொண்டு எடுத்துரைத்தார்.

போட்டித் தேர்வுகளுக்கு தயாராவது எப்படி?, தொழில் வாய்ப்புகளைத் தெரிவு செய்வதன் நன்மைகள் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

மேலும், நேற்று, இன்று, நாளை என அன்றாட நிகழ்வுகளை நாளும் செய்தித்தாள் வழி அறிந்து கொள்ள, மாணவர்கள் செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூறினார். விரும்பிய பாடம் கிடைக்கவில்லையெனில், கிடைத்த பாடத்தை விரும்பிப் படிக்க தன்னைத் தயார்படுத்திக் கொள்ளக் கூறினார்.

இந்நிகழ்வில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.