குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை ஆட்சியரிடம் பொதுமக்கள் அளித்தனர்.

பொதுமக்களிடமிருந்து இலவச வீடு வேண்டி 53 மனுக்களும், வீட்டுமனைப்பட்டா வேண்டி 74 மனுக்களும், வேலைவாய்ப்பு வேண்டி 17 மனுக்களும், 174 இதர மனுக்கள் என மொத்தம் 318 கோரிக்கை மனுக்களையும் மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார்.

பின்னர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி, அதன் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.