பி.எஸ்.ஜி. கூடைப்பந்து போட்டி இந்திய கப்பல் படை அணி வெற்றி

56 வது பி.எஸ்.ஜி. கூடைப்பந்து போட்டியில் இந்திய கப்பல் படை அணி முதலிடத்தை பிடித்து கோப்பையை வென்றது.

கோவை, பி.எஸ்.ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 56 வது ஆண்கள் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கோவையில் ஆகஸ்ட் 3-ம் தேதி துவங்கி 7-ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு பி.எஸ்.ஜி டெக் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய கப்பல் படை அணியை எதிர்த்து ரெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு அணி விளையாடியது. இதில் இந்திய கப்பல் படை அணி 108 – 85 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்று பி.எஸ்.ஜி. கோப்பையை தட்டிச்சென்றது.

வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற அணிக்கு ரூ.1 லட்சம் மற்றும் பி.எஸ்.ஜி கோப்பை, இரண்டாம் இடம் பெற்ற ரெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு அணிக்கு ரூ.50,000 மற்றும் கோப்பையை வழங்கினார்.

விழாவிற்கு பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் கோபால கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சி.ஆர்.ஐ பம்ப் நிறுவனங்களின் இணை நிர்வாக இயக்குனரும், கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவருமான செல்வராஜ் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.