சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை உறுதி

பெண்கள், சிறுமியரை பாதுகாக்கும் நோக்கில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பலாத்காரம் செய்வோருக்கு, துாக்கு தண்டனை அளிக்கும் சட்டத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டப்படி, 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பலாத்காரம் செய்யும் கொடியவருக்கு, முன் ஜாமின் கிடைக்காது. பலாத்கார குற்றங்கள் அனைத்துக்கும், புதிய சட்டப்படி, தண்டனைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. புதிய சட்டப்படி, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு, இறக்கும் வரை வாழ்நாள் சிறை அல்லது துாக்கு தண்டனை அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது.   பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையை விரைவில் முடிக்க, புதிய சட்டம் வகை செய்கிறது.