இந்துஸ்தான் கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர்கள் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு பேரணியை வியாழக்கிழமை கல்லூரி வளாகத்தில் இருந்து துவங்கினர்.

மேலும் இவ்விழிப்புணர்வு பேரணியில் போதைப் பொருளின் தீமை குறித்த பதாகைகளையும், கோஷங்களையும் எழுப்பி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இவ்விழிப்புணர்வு பேரணியில் சமூகப்பணித்துறை, உடற்கல்விதுறை, நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 500 பேர் கலந்து கொண்டனர்.

இவ்விழிப்புணர்வு பேரணியை இந்துஸ்தான் கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் செயலர் பிரியா சதீஸ்பிரபு, முதல்வர் பொன்னுசாமி, சமூகபணித்துறையின் தலைவி புனிதா, பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.