நேரு பொறியியல் கல்லூரிக்கு A+ சான்றிதழ்

நேரு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிக்கு தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார குழு A+ தர சான்றிதழ் வழங்கியுள்ளது.

நேரு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அதன் நீண்ட வரலாற்றில் ஒரு மைல் கல்லை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார குழு (NAAC) CGPA 3.3 3 உடன் மிகவும் A+ தரச் சான்றிதழை பெற்றுள்ளது.

நேரு கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணதாஸ் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி, செயலர் கிருஷ்ணகுமார், “நிர்வாகத்தின் ஒரே லட்சியம் நேரு குழும நிறுவனங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது என்ற கனவு மிக விரைவில் நனவாகும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது” என தெரிவித்தனர்.