எஸ்.என்.எஸ் சார்பில் தடகள போட்டி: கோப்பை வென்ற அவிநாசிலிங்கம் பள்ளி

எஸ்.என்.எஸ். கல்வி குழுமங்கள் சார்பாக நடைபெற்ற ஜூனியர் தடகளப் போட்டியில் வடகோவையில் உள்ள அவிநாசிலிங்கம் மேல்நிலைப்பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

மாநில அளவில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஜூனியர் தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா கோவை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இப்போட்டிகளை கோவை அத்லட்டிக் கிளப்புடன் இணைந்து எஸ்.என்.எஸ். கல்வி குழுமங்கள் நடத்தியது.

16 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 3000 க்கும் மேற்பட்டோர் போட்டிகளில் பங்கேற்றனர்.

இதில், 100 மீட்டர் முதல் 1500 மீட்டர் வரையிலான ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

முன்னதாக செவ்வாய் கிழமை நடைபெற்ற விளையாட்டு போட்டிகளை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர துணை மேயர் வெற்றி செல்வன் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

இதில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை 6 வது முறையாக அவிநாசிலிங்கம் மேல்நிலை பள்ளி பெற்றது.

கோவை அனைத்து விளையாட்டு சங்க தலைவர் மணிகண்டன், கோவை மாமன்ற உறுப்பினர்கள், எஸ்.என்.எஸ். கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.