மோஹன்ஸ் நீரிழிவு மையம் சார்பில் மாபெரும் பரிசோதனை முகாம்

உலகிலேயே சர்க்கரை நோயில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இளைஞர்கள் கூட நீரிழிவு நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். எனவே சரியான நேரத்தில் நோயைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பது மிகவும் முக்கியம். மேலும் கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயினால் கண் மற்றும் நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க சரியான முறையில் உடற்பயிற்சி செய்தல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.

இதனை கருத்தில்கொண்டு மக்களுக்காக இந்தியாவின் முன்னணி நீரிழிவு மருத்துவமனையான, டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் வரும் 7, ஆம் தேதி காலை 6:30 மணி முதல் மதியம் 2 மணி வரை நீரிழிவுக்கான மாபெரும் கண் மற்றும் பாத பரிசோதனை முகாமை கோவை அவிநாசி சாலையில் உள்ள அண்ணாசிலைக்கு அருகில் உள்ள மையத்தில் நடத்துகிறது.

இந்த முகாமில் இலவச உணவு ஆலோசனை, கண் சிகிச்சை, சீரற்ற இரத்த சர்க்கரை அளவை கண்டறிதல், உடல் நிறை குறியீட்டெண் (BMI) மற்றும் இரத்த அழுத்தம் கண்டறிதல் ஆகியவையும் பரிசோதனை செய்யப்படுகிறது.

கோவை, அவிநாசி சாலையில் உள்ள டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் நீரிழிவு சிறப்பு மருத்துவர், பாமா பொன்மணி கூறுகையில், “துரதிஷ்டம் என்னவெனில், மற்ற நோய்களை போல் சர்க்கரை நோயை, அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்க முடியாது. வேறு ஏதோ பிரச்சனைக்காக டாக்டரிடம் சிகிச்சைக்கு வரும்போது தற்செயலாக, ரத்த பரிசோதனை செய்யும் நிலையில், தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பது பலருக்கு தெரிய வருகிறது.

நீரிழிவு நோயினால் ஏற்படும் சிக்கல்களை பற்றிய சரியான விழிப்புணர்வு மக்களிடம் இல்லாதது மிகவும் வருத்தமளிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைக்காவிட்டால் அது கண், பாதம், இதயம் மற்றும் சிறுநீரகம் உள்பட அனைத்து உறுப்புகளையும் பாதிக்கக்கூடும்.

இந்த முகாமில் கலந்துகொள்ளும் நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு அதனை எப்படி கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும் என்றும், ஆரோக்கியமான வாழ்க்கைமுறை பற்றிய விழிப்புணர்வும் வழங்கப்படும். நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கு நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கான ஆலோசனை வழங்கப்படும்.” என்றார்.

மேலும் தகவலுக்கு: 7825888656 / 04224258888.