பால்-பேட்மிண்டன் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி வெற்றி

பி.பி.ஜி குரூப்ஸ் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ் நடத்திய பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டியில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

பால்-பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் அணி முதலிடத்தையும், பெண்கள் அணி மூன்றாம் இடத்தையும் பெற்றன. விளையாட்டு விழாவில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் பாராட்டினர்.