சதுரங்க போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மாணவர்கள் இரண்டாமிடம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் பி.பி.ஜி இன்டர்-ஸ்கூல் விளையாட்டு போட்டியில் சதுரங்கம் போட்டி பிரிவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.

இப்பள்ளி மாணவர்கள் சமீபத்தில் பி.பி.ஜி குரூப்ஸ் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸ் நடத்திய பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர்.

அதில் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் செஸ் பிரிவில் இப்பள்ளியைச் சேர்ந்த ரோஹித், பிரவீன், அபிஷேக் மற்றும் பாண்டிசூரியா ஆகியோர் ரன்னர்-அப் இடத்தைப் பெற்றனர்.