ஶ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் யோகா போட்டியில் சாதனை

ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மற்றும் உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 68 மாணவர்கள் அண்மையில் நடந்த 11 வது மாவட்ட அளவிலான யோகாசன போட்டியில் கலந்து கொண்டனர். அதில் 14 மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

இந்த மாவட்ட அளவிலான யோகா போட்டிகளை சத்குரு யோக வித்யாலயம் கோவையில் உள்ள கே.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் நடத்தியது. இதில் அக்கல்லூரியின் முதல்வர் நாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து 900க்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர்.

அதில், ஸ்ரீ ராமகிருஷ்ணன் மெட்ரிகுலேஷன் மற்றும் உயர்நிலைப் பள்ளியின் 14 மாணவர்கள் பல முக்கிய பரிசுகளை வென்றதுடன் சிறந்த யோகா குழுவிற்கான கோப்பையையும் தட்டிச் சென்றனர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி சார்பில் போட்டியில் பங்கு பெற்ற 68 மாணவர்களையும், பள்ளியின் நிர்வாக குழுவினர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேற்றனர். பள்ளியின் முதல்வர் ரூபேஷ் குமார் அனைத்து மாணவர்களையும் பாராட்டினார்.