எஸ்.என்.எஸ் சார்பில் ஜூனியர் தடகளப் போட்டிகள்

2000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

எஸ்.என்.எஸ் கல்வி குழுமம் மற்றும் கோவை அத்லட்டிக் கிளப் இணைந்து நடத்தும் மாநில மற்றும் மாவட்ட அளவில் பள்ளி குழந்தைகளுக்கான ‘எஸ்.என்.எஸ் 8 வது ஜூனியர் தடகளப் போட்டிகள் – 2022’ கோவை நேரு ஸ்டேடியத்தில் செவ்வாய் கிழமை நடைபெற்றது.

எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் செந்தூர்பாண்டியன் வரவேற்புரை வழங்கினார்.

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவியர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது. இதை தடகள வீரரும், கோவை மாவட்ட தடகள சங்கத்தை சேர்ந்தவருமான ஹர்ஷவர்தன் பெற்றுக்கொண்டார்.

பின்னர் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.

சுமார் 2000 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று உள்ளனர்.

எம்.கே.குரூப் ஆஃப் கம்பெனீஸ் நிர்வாக இயக்குனரும், கோவை ஆல் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் மணிகண்டன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நாளை நடைபெறும்.

 

(மேற்கண்ட செய்தி குறித்த கூடுதல் தகவல் சில மணி நேரத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.)