என்.சி.சி ட்ரைனிங் ஏரியாவை திருச்சி, சென்னையிலும் உருவாக்க திட்டம்

தமிழகத்தில் ஒரு என்சிசி டிரைனிங் ஏரியா மட்டும் தான் தற்போது உள்ளதாகவும், அதனை திருச்சி, சென்னை ஆகிய மாவட்டங்களில் உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தேசிய மாணவர் படை துணை இயக்குநர் அத்துல் குமார் ரஸ்தோகி தெரிவித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள என்.சி.சி அலுவலகத்தில் மாவட்ட என்.சி.சி அதிகாரிகளுடன் தேசிய மாணவர் படை துணை இயக்குநர் அத்துல் குமார் ரஸ்தோகி ஆய்வு மேற்கொண்டார்.

இதில் கோவை மாவட்ட என்.சி.சி மாணவர்கள் சிலர் அவர்களை துணை இயக்குனரிடம் அறிமுகபடுத்தி கொண்டனர். அவர்களிடம் என்சிசி யை தேர்ந்தெடுக்க காரணம் குறித்தும், வருங்கால திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாவட்டத்தில் என்.சி.சி செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாக தெரிவித்தார். தேசிய அளவில் தூய்மை பணிகள் போன்ற சமூக செயல்பாடுகளிலும் என்சிசி முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தி வருகிறது எனவும் தெரிவித்தார்.

ஒரு என்சிசி டிரைனிங் ஏரியா மட்டும் தான் தமிழகத்தில் தற்போது உள்ளதாகவும், அதனை திருச்சி, சென்னை ஆகிய மாவட்டங்களில் உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். கொரோனாவுக்கு பின் என்.சி.சி.யில் ஆட்கள் அதிகரிப்பு ஆகவில்லை. இதனை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மேலிடத்திற்கு வலியுறுத்தி உள்ளோம். என்.சி.சி டிரைனிங் படிப்புகள் சமுதாயத்திற்கு மிகவும் உதவும் என தெரிவித்தார்.