கே.எம்.சி.ஹெச் சார்பில் கல்லீரல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு

கோவை, கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் சார்பில் ஆரோக்கியமான கல்லீரல் மகிழ்ச்சியான வாழ்க்கை (healthy liver happy life) என்ற தலைப்பில் நடைபயணம் (Walkathon) நிகழ்வு ஞாயிறன்று பந்தய சாலையில் நடைபெற்றது.

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் செயல் இயக்குநர் அருண் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு கோவை காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நடைபயணத்தை துவக்கி வைத்தார்.

இந்த நடைபயணத்தில் மருத்துவமனையின் மருத்துவர்கள், ஊழியர்கள், கல்லீரல் நோயிலிருந்து மீண்டவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.