தேசிய அளவிலான கார் பந்தயம்… மணலில் சீரி பாய்ந்த கார்கள்…

கோவை ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் இந்திய மோட்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் தேசிய அளவிலான நான்கு சக்கர வாகனங்களுக்கான “ப்ளூ பேண்ட் தேசிய ரேலி சாம்பியன்ஷிப் 2022” போட்டிகள் இன்று நடைபெற்றது.

இதன் முதல் சுற்று கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற்ற நிலையில் இரண்டாம் சுற்று கோவை எல்.என்.டி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நடைபெற்றது. சாம்பியன்ஷிப் மற்றும் சேலஞ்ச் பிரிவுகளில் பங்கேற்ற இதில் 27கிலோ மீட்டர் முழுவதும் மணல் தடம் கொண்ட பாதையில் கார்கள் சீரி பாய்ந்தன.

இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட கார்களுடன் வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இரண்டாம் சுற்று போட்டிகளை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

“ப்ளூ பேண்ட் தேசிய ரேலி சாம்பியன்ஷிப் 2022” இன்றைய சுற்றுகள் முடிவில் கௌரவ் கில், கர்ண கடூர், அரூர் அர்ஜுன் ராவ், சேதன் ஷிவ்ராம், ஆதித்யா தாக்கூர் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

இது குறித்து காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியதாவது, கோவையில் செயல்படும் ப்ளூ பேண்ட் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்த சிறப்புமிக்க கார் பந்தயத்தை கோவையில் இந்த ஆண்டு நடத்தியது.

இந்த முறை முதல் ஸ்டேஜில் அமைக்கப்பட்டுள்ள 27 கிலோமீட்டர் தடம் சமீப காலத்தில் எங்கும் பார்த்திராத அளவு கொண்டதாக இருந்தது என்றார்.

இந்த பந்தயம் நிச்சயமாக ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது என்றும் வரும் காலங்களில் இந்த விளையாட்டுக்கு மக்களிடையே பேராதரவு அதிகம் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் என கூறி அனைத்து வீரர்களுக்கும் ப்ளூ பேண்ட் சார்பில் தனது  வாழ்த்துக்களையும்  தெரிவித்துக்கொண்டார்.