துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் அணி 4 தங்கம், 2 வெண்கலம் வென்று அசத்தல்

மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற நடிகர் அஜித் அணி 4 தங்கம், 2 வெண்கலம் வென்றுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மாநில துப்பாக்கி சுடும் போட்டி, ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற ரைபிள் கிளப்பில் 47வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி, பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 25ம் தொடங்கியது.

இதில், தமிழ்நாடு முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1,300 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

கடந்த 27-ம் தேதி இப்போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்றார். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்ள முடியும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

திருச்சியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமாரின் அணி 4 தங்கம், 2 வெண்கலம் வென்று அசத்தியுள்ளது.