அவிநாசிலிங்கம் கல்லூரியில் சுதந்திர தின விழிப்புணர்வு

அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனம் சார்பாக, இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்திய “அனைவருடைய வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்றுவோம்’ என்ற உறுதியை வலியுறுத்தும் விதமாக பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்டமும், விளையாட்டு துறையும், தேசிய மாணவர் படையும் ஒருங்கிணைந்து இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து நடத்தினர்.

இந்நிகழ்வினை பல்கலைக்கழக பதிவாளர் கௌசல்யா மற்றும் மாணவர் நல முதன்மையர் உமாமகேஸ்வரி தொடங்கி வைத்தனர். வீட்டில் கொடி ஏற்றுவோம் என்பதை வலியுறுத்தும் விதமாக HAR GHAR TIRANGA என்னும் எழுத்துக்களின் வடிவத்திலும் இந்திய வரைபட வடிவத்திலும் மாணவியர் அனைவரும் திரண்டு நின்றனர். இதை வலியுறுத்தி பேரணியும் நடைபெற்றது.

இதில் 400 நாட்டு நலப்பணித்திட்ட மாணவியரும், 250 விளையாட்டுத் துறை மாணவியரும், 25 தேசிய மாணவர் படை மாணவியரும் பங்கேற்றனர்.