வளர்ந்து வரும் சிறு பவுண்டரி தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டும் சிவராமன்

“நீ செய்யும் முயற்சிகள் எவ்வளவு முறை தோற்றாலும் உன் ஊக்கம் என்ற ஒன்றிற்கு சோர்வு என்ற ஒன்றை நீ அளிக்காதவரை என்றுமே நீ கடுமையான போராளி தான்” என்பதற்கு ஏற்றவாறு காலங்கள் கடந்தாலும் என் உழைப்பை கைவிட மாட்டேன் என்ற உத் வேகத்தோடு உழைத்துக்கொண்டிருக்கிறார் சிவராமன் 84.

கோவையை சேர்ந்த இவர் சென்னையில் இந்தியாவின் நம்பர் 1 நிறுவனமான சிவா நந்தா ஸ்டீல்ஸ் கம்பெனியில் பொறுப்பாளராக 36 வருடங்களாகவும், மேலாளராக 56 நாட்களாகவும் பணியாற்றி வந்தார். இவர் அந்த ஸ்டீல்ஸ் கம்பெனியில் பணியாற்றும் போதே, 24 மணிநேரத்தில் 200 டன்கள் முடிக்க வேண்டிய இடத்தில் இவரின் கடின உழைப்பால் மற்றும் புத்திசாலித்தனத்தினாலும் 500 டன்கள் செய்து முடித்துள்ளார்.

இது போன்று பல முறை தனது திறமையால் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையும் கிடைக்க வேண்டும் மற்றொன்று கம்பனிக்கு லாபமும் ஈட்டி தரும் வகையில் ஊழியர்களை வழி நடத்தி வந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, இவரின் திறமையை கண்டு வெளிநாடுகளில் உள்ள தொழில்முனைவோர்கள் இவரை அழைத்து பல விருதுகளும் வழங்கினர். அதோடு அங்கேயே நிறைய வேலை வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அங்கெல்லாம் பணிபுரியாமல். தான் பெற்ற அனுபவத்தை இந்தியாவுள்ள வளர்ந்து வரும் சிறிய பவுண்டரி தொழில்முனைவோர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வலம் வருகிறார் சிவராமன்.

தற்போது கோவையில் உள்ள தேவாங்க பள்ளியின் செயலாளராக பணிபுரிந்துகொண்டே, இவர் மையவிலக்கு வார்ப்பு செயல்முறைப்படுத்தி வருகிறார். மையவிலக்கு வார்ப்பு என்பது ஒரு வார்ப்பு நுட்பமாகும். இது பொதுவாக மெல்லிய சுவர் சிலிண்டர்களை அனுப்ப பயன்படுகிறது. உலோகம், கண்ணாடி மற்றும் கான்கிரீட் போன்ற பொருட்களை அனுப்ப இது பயன்படுகிறது.

மையவிலக்கு வார்ப்பு என்பது திரவ உலோகத்தை அதிவேக சுழலும் அச்சுக்குள் செலுத்தும் தொழில்நுட்பம் மற்றும் முறையாகும். இது திரவ உலோகத்தை அச்சு நிரப்பவும் வார்ப்பை உருவாக்கவும் மையவிலக்கு இயக்கத்தை செயல் படுத்தவும் வைக்கிறது. இந்த செயல்முறையால் உற்பத்தி செய்யப்படும் ரோல் மற்றும் கதிர்வீச்சு ரோல் எப்போதும் நல்ல தரத்தைக் கொண்டிருக்கும்.

இது குறித்து சிவராமன் கூறியதாவது, “பல்லாண்டு காலமாக டீ தூள் தயாரிப்பு மெஷின்களில் (8.5” O.D. * 6” I.D. * 2”) சி.டி.சி. செக்மென்ட்களை டீ இலைகளை கட் செய்ய பயன்படுத்தி வருகிறார்கள். இந்த பழைய செயல்முறைகளில் சி.டி.சி. செக்மென்ட்களை ஒன்றாக இணைத்த ரோலர்களின் பற்கள் படுவேகமாக 7 நாட்களில் தேய்ந்து விடுகிறது. அதனால் டீ இலைகள் சரியாக நறுக்கப்படுவதில்லை. அதனால், தேய்ந்த ரோலர்களை எடுத்து விட்டு புதிய ரோலர்கள் பொருத்தப்படுகிறது. தேய்ந்த ரோலர்கள் 3 முறை மறு சீரமைப்பு செய்து உபயோகிக்கப்படுகிறது.

இந்த முயற்சியில், ஒவ்வொரு முறையும் வெளிப்புற விட்டம் 0.5”குறைந்து 8.5” என்பது 8”, 7.5”, 7 ஆக குறைந்து, மேலும் உபயோகிக்க தகுதியற்றதாகிறது. மாதத்தில் 8 ரோலர்களை மாற்ற வேண்டியுள்ளதால் பொருள் நஷ்டம், நேர விரயத்தோடு, டீ தூள் தரமும் பாதிக்கப்படுகிறது.

இந்த சிரமங்களை போக்கை புதிய வழிகள் என்னிடம் உள்ளது. முதலில் CFe8M என்ற உலோக கலவை உருக செய்து, மையவிலக்கு வார்ப்பு மெஷினில் ஊற்றி, சிலிண்டர் வார்ப்புகளாக செய்து, சூடு படுத்தி, இரண்டாவதாக 15 செக்மென்ட்களை ஒன்றாக இணைத்து 30 நீள ரோலர்களை அதன் முழு நீளத்தில் எங்கேயும் வளையாமல் ஒரே சீரான வகையில் தயார் செய்து திடமான (sound) விதத்தில் சூடுபடுத்தி (8.5”O.D. * 6” I.D. * 30”) நீளத்திற்கு செய்து கூடவே சீரான பற்களை உருவாக்க பற்களை கட் செய்ய வேண்டும். இந்த முறைகளை பயன்படுத்தினால் தேய்மான சக்தி 6 மடங்கு அதிகமாகி, குறைந்தது 6 மாதம் வரை உழைக்கும். உற்பத்தியின் விகிதமும் அதிகமாகும். விற்பனையும் கூடும். பன்மடங்கு அனுகூலங்களை பெறலாம் எனத் தெரிவித்தார்.

மேலும், இது பற்றிய முழு விவரங்களை  அறிய சிவராமன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்: 9894534475.