செஸ் குதிரைக்கு தம்பி என்று பெயர் வைக்க காரணம் – மு.க.ஸ்டாலின் சுவாரஸ்ய பகிர்வு

சென்னையில் கோலாகலமாக தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டியில் `செஸ் குதிரைக்கு தம்பி என பெயரிட இதுதான் காரணம்’முதல்வர் ஸ்டாலின் சுவாரஸ்யமாக பகிந்தார்.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நேற்று சென்னையில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. செஸ் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு திருவிழாவாக காட்சியளிக்கப்பட்டது. இந்த போட்டி முதல் முறையாக இந்தியாவில் நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

செஸ் தொடக்க விழாவில் தனது உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு தான் இந்தியாவின் செஸ் தலைநகரம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொண்டார். 18 மாதங்கள் நடக்க வேண்டிய செஸ் போட்டிக்கான ஏற்பாடுகள், 4 மாதங்களில் நடந்திருப்பதாகவும் பூரித்துக்கொண்டு பேசினார்.

செஸ் குதிரைக்கு தம்பி என்று பெயர் வைத்தது பற்றி குறிப்பிட்ட ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா தனது அன்புத்தொண்டர்களை தம்பி என்று அழைப்பதுதான் வழக்கம் என்றும் தம்பி என்பது சகோரதரத்துவத்தை வலியுறுத்துவதாகவும், நாமெல்லாம் ஒரே குடும்பம் என்பதை குறிப்பிடுவதாகவும், இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் நாளாக இத்தொடக்க விழா அமைந்துள்ளதாகவும் தனது உரையில் தெரிவித்தார்.