மோடிக்கு நினைவுப்பரிசை வழங்கிய ஸ்டாலின்

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு மாமல்லபுரம் கடற்கரை கோவில் போன்ற சிறிய அளவிலான சிலையை, நினைவுப்பரிசாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.

செஸ் விளையாட்டின் ஒலிம்பிக் என்று அழைக்கப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பகுதியில் நேற்று துவங்கியது.

ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிக்காக தொடக்கவிழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய, மாநில அமைச்சர்கள் என பல அமைச்சர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின், அவருக்கு நினைவுச் சின்னமாக மாமல்லபுரம் கடற்கரை கோவில் போன்ற சிறிய அளவிலான சிலையை, வழங்கினார்.