தி லெஜண்ட் திரைவிமர்சனம்

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் ‘தி லெஜண்ட்’. இப்படத்தில் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இப்படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ளது.

தமிழ்,தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா முறையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியானது.

உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி டாக்டர் சரவணன் தனது கிராமத்தில் உயிர் நண்பராக இருந்த ரோபோ சங்கர் நீரிழிவு நோய் காரணமாக இறந்து விடுகிறார், அதே போல் வேறு யாரும் நம்  நாட்டில் இறக்கக் கூடாது என்பதற்காக புதிய மருந்து ஒன்றை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். ஆனால், அதற்கு எதிராக மருந்து மாஃபியா கும்பல் செய்யும் சதிகள் எப்படி எதிர்க்கிறார் என்பது தான் படத்தின் கதை.

ஒரு அன்பான மனிதன் தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், வலிமையாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி  ஒரு லெஜண்டாக எப்படி உருவாகிறான் என்ற கருத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

ரசிகர்கள் லெஜண்ட் படத்தை உற்சாகமாக கொண்டாடினர். திரையரங்குகள் முன்பு பேனர் வைத்தும், மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்து ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இன்று காலை 4 மணியளவில் காட்சி தொடங்கியதும், பல திரையரங்குகளில் கூட்டம் அலைமோதியது.

படத்தை பார்த்த ரசிகர்கள் லெஜண்ட் குறித்து கூறுகையில்: லெஜண்ட் குறித்து ரசிகர்கள் கூறுகையில்: இந்த திரைப்படத்தில் நடித்துள்ள சரவணன் முதன் முதலில் நடித்தது போல் தெரியவில்லை. முன்னணி நடிகர்கள் நடித்து வெளிவரும் படங்களின் அளவிற்கு திரைப்படத்தை பார்த்த அனுபவம் உள்ளது. குடும்ப படமாக எடுக்கப்பட்டுள்ளதால் அனைவரும் பார்க்கலாம் என்று தெரிவித்தனர்.

 

Article by: பா .கோமதி தேவி