இந்திய வரலாற்றின் மறக்க முடியாத நபர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

இந்தியாவின் ஜனாதிபதியாகவும், இளைஞர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டியாகவும் இருந்தவர் அப்துல் கலாம்.  இன்று அவரது 7 ஆம் ஆண்டு நினைவு தினம்.

தமிழகத்திலுள்ள ஒரு சிறிய நகரத்தில், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.  தனக்கு தானே கற்பித்து இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே தலைச்சிறந்த வானியல் பொறியாளர்களுள் ஒருவர்.

இந்தியாவின் குடியரசுத் தலைவர் மட்டுமில்லாமல் மக்களின் ஜனாதிபதி, விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுனர் என பலபெயர் கொண்டவர்.. தன் வாழ்நாளின் இறுதிவரை நாட்டிற்காகவே வாழ்ந்துக் காட்டினார்.

அவரது நினைவு நாளான இன்று அவரை பற்றி சுவரஸ்யமான விஷயங்களை காணலாம்.

அப்துல் கலாமின் கனவு ஒரு பைட்டர் பைலட்டாக வேண்டும் என்பது தான். இந்த தேர்வில் இவர் 9வது இடம் பிடித்தார். ஆனால் இருந்தது 8 காலியிடம் தான். அப்துல் கலாம் சந்தித்த மிகப்பெரிய தோல்வி.

1998ம் ஆண்டு இந்தியா பொக்ரைன் 2 என்ற அணு ஆயுத சோதனையை நடத்தியது. இதற்கு முழுமையாக செயல்பட்டவர் அப்துல் கலாம் தான். இவரது திட்டம் தான் வெற்றி பெற உதவியது.

அப்துல் கலாம் மிகப்பெரிய அறிஞர் என நமக்கு தெரியும்.ஆனால் அவரை கவுரவிக்கும் வகையில் அவருக்கு 40 பல்கலைகழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.

அப்துல் கலாம் அமெரிக்காவிலுள்ள நியூயார்க் விமான நிலையத்திற்கு சென்ற போது அவர் பெயர் இஸ்லாமிய பெயர் என்ற ஒரே காரணத்திற்காக அவரிடம் வெடிகுண்டு இருக்கிறதா என சோதனை செய்தனர்.

அப்துல் கலாம் ஒரு முறை சுவிட்சர்லாந்து சென்றார். அன்றைய நாள் மே 26, அவர் இறந்த பின்பு சுவிட்சர்லாந்து நாட்டில் அவர் வந்த நாளை அந்நாட்டின் அறிவியல் தினமாக அறிவித்துள்ளது

அப்துல் கலாம் ட்விட்டரில் இருந்தபோது   வெறும் 38 பேரை மட்டுமே பாலோ செய்தார். அதில் இந்திய கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மணனும் ஒருவர்.

அப்துல் கலாம் முன் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்னேகல் தக்கார் என்பவர் வறுமை குறித்து பேசியதை கண்டு வியந்தார். தான் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற நிகழ்விற்கு அந்த சிறுமியை விருந்தினராக அழைத்திருந்தார்.

அப்துல் கலாம் ஷிலோங் ஐஐஎம்-ல் பேசிக்கொண்டிருந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு கீழே விழுந்து மரணமடைந்தார். அவர் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதையே அதிகம் விரும்பினார். அதை செய்து கொண்டிருக்கும் போதே இறந்துவிட்டார்.

 

Article by: பா.கோமதிதேவி