அரசு கல்லூரியில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

தமிழகத்தில் அரசு பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க கடந்த ஜூன் 22 முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்தநிலையில் சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவு தாமதம் ஆனதால் மாணவர்கள் விண்ணப்பிக்க 5 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி 27-ம் தேதி வரை கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என யு.ஜி.சி. உத்தரவிட்டது.

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இதே போல 163 கலை அறிவியல் கல்லூரிகளில் சேர 4 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இந்தநிலையில் மாணவர்களுக்கு கொடுத்த அவகாசம் இன்று மாலையுடன் முடிகிறது.