வேளாண் தகவல்கள்

 விவசாய கடன் :

தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம்

கூட்டுறவுச் சங்கம்

‘கூட்டுறவே நாட்டு உயர்வு’ என்ற கோஷத்துடன் செயல்பட்டு வரும் கூட்டுறவுத்துறை, கிராமங்கள்தோறும் விவசாயிகளுக்காக, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களை அமைத்து பயிர்க்கடன், நகைக்கடன், தானிய ஈட்டுக்கடன், இயந்திரங்களுக்கான கடன் என பல வகையான கடன் திட்டங்களைச் செயல்படுத்துவதோடு, உரம், பூச்சிக்கொல்லி, விதை போன்றவற்றையும் விற்பனை செய்து வருகிறது. இத்தகைய சங்கங்களில் சில சரிவர இயங்காமல் இருந்தாலும், தவணை பாக்கி இல்லாமல் லாபத்தில் இயங்கும் கூட்டுறவு சங்கங்களும் பல உண்டு

”இந்தச் சங்கம் 1958-ம் ஆண்டு துவங்கப்பட்டது. உறுப்பினர்கள் மூலமாக விவசாயிகளின் பங்குத்தொகை 67 லட்சம் ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் அளவுக்குக் கடன் வரவு-செலவு நடக்கிறது. 8 கோடி ரூபாய் அளவுக்கு வைப்பு நிதி உள்ளது.

”தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி’ மாவட்டம்தோறும் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளுக்குக் கடன் கொடுக்கிறது.

மத்திய கூட்டுறவு வங்கி, அந்த மாவட்டம் முழுவதிலும் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதத்தில் கடன் கொடுக்கிறது.

கூட்டுறவு சங்கங்கள், விவசாயிகளுக்குக் கடன் கொடுக்கின்றன. கூட்டுறவு சங்கம் என்பதால், கண்டிப்பாக விவசாயிகளின் பங்களிப்பு இருக்க வேண்டும். அதனால், கடன் பெறும் தொகையில் 10 சதவிகிதம் விவசாயிகள் பங்குத் தொகையாகச் செலுத்த வேண்டும்.

சங்கம் லாபத்தில் இயங்கினால், இந்தப் பங்குத் தொகைக்கு டிவிடென்ட் கிடைக்கும். எங்கள் சங்கத்தில், விவசாயிகளின் பங்குத் தொகைக்கு லாபத்தில் 14 சதவிகிதம் டிவிடென்ட் கொடுக்கிறோம்.

 பயிர்க் கடனுக்கு வட்டியில்லை

பொதுவாக, குறுகியகால பயிர்க் கடன்களுக்கு 7 சதவிகித வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிலத்தின் பட்டா, சிட்டா- அடங்கல் போன்ற ஆவணங்கள் கொடுத்து கடன் பெறலாம். நெல், நிலக்கடலை போன்ற குறுகியகால பயிர்களுக்கு 6 மாதங்களும், வெல்லம் உற்பத்திக்கான கரும்புக்கு மற்றும் மஞ்சள், வாழை போன்ற பயிர்களுக்கு 12 மாதங்கள், ஆலைக் கரும்புக்கு 15 மாதங்கள் என, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் பயிர்க் கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டால்,முழுமையாக வட்டி செலுத்தத் தேவையில்லை. அப்படி செலுத்தாத பட்சத்தில், 7 சதவிகித வட்டியுடன் ஒரு சதவிகித அபராத வட்டியையும் சேர்த்துச் செலுத்த வேண்டும்.

  • பயிர்க் கடன் வாங்கும் விவசாயிகள் முறையான விளைபொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதால் குறிப்பிட்ட தொகைக்கு விதை, உரங்கள், பூச்சிக்கொல்லி போன்றவற்றையும் கொடுக்கிறோம். அதிக அளவு உரங்கள், பூச்சிக்கொல்லிகள் வேண்டாம் என்பவர்கள், கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு, தேவையான அளவுக்கு மட்டும் வாங்கிக் கொள்ளலாம். இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்தால், தோட்டத்தை கூட்டுறவு வங்கியின் செயலர் ஆய்வு செய்த பிறகு முழுக் கடன் தொகையும் வழங்க பரிந்துரை செய்வார். பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட குத்தகை நிலங்களுக்கும் பயிர்க் கடன்கள் உண்டு.

 நகை மூலம் பயிர்க் கடன்

  • சொந்த ஜாமீனில் பயிர்க் கடனாக ஒரு லட்சம் ரூபாய் வரை மட்டும்தான் வழங்கப் படும். அதற்குமேல் தேவைப்படுவோர், நகைக் கடன் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நிலத்தின் ஆவணங்களைக் கொடுத்து, அதில் குறிப்பிட்டுள்ள பயிரின் ஆயுள் காலத்துக்கு வட்டியில்லாத கடன் பெறலாம். குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பிச் செலுத்த முடியாதவர்கள்,
  • 7 சதவிகித வட்டியுடன், கூடுதலாக ஒரு சதவிகிதம் அபராத வட்டியும் சேர்த்துச் செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் பயிர்க் கடன் பெறுபவர்கள் உரம், விதை என எதுவும் வாங்காமல், முழுக்கடனையும் பணமாக பெற்றுக்கொள்ளலாம்”