சென்னை வரும் பிரதமரின் 2 நாள் பயண திட்டம்

சென்னை மாபல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெற உள்ளது. இதன் துவக்க விழா ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் பிரதமர் நரேந்திர மோடியால் நாளை துவக்கி வைக்கப்படுகிறது.

இதற்காக சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாள் பயண விவரத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (ஜூலை 28) பிற்பகல் 2.20 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து விமானப்படை விமானத்தில் புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார்.

5.25 மணிக்கு விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு, 5.45 மணிக்கு அடையாரில் உள்ள இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் தளத்தில் தரையிறங்குகிறார்.

அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டரங்கிற்குச் செல்கிறார். 6 மணி முதல் 7.30 வரை நடைபெறும் 44 வது செஸ் ஒலிம்பியாட் விழாவை தொடங்கி வைக்கிறார்.

இரவு 7.35 மணிக்கு காரில் பயணம் மேற்கொண்டு, 7.50க்கு கிண்டி ஆளுநர் மாளிகையை சென்றடைகிறார்.

அன்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்கி விட்டு ஜூலை 29 அன்று காலை 9.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக 10 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சென்று
அங்கு நடைபெறும் 42 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் காலை 11.35 மணிக்கு காரில் புறப்பட்டு 11.50 க்கு விமான நிலையத்திற்கு செல்கிறார்.

சென்னை விமான நிலையத்திலிருந்து 11.55 மணிக்கு விமானப்படை விமானம் மூலம் புறப்படும் பிரதமர், பிற்பகல் 2.15 க்கு குஜராத்திற்கு திரும்புகிறார்.

பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் நாளை முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.