ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் பேராசிரியர்களுக்கான 5 நாள் திறன்மேம்பாட்டுப் பயிற்சி துவக்கம்

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பேராசிரியர்களுக்கான 5 நாள் திறன்மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடங்கியது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், அக மதிப்பீட்டுத்தரக்குழு (ஐ.கியூ.ஏ.சி.) சார்பில், “உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கான அணுகுமுறைகள்” என்ற தலைப்பில் பேராசிரியர்களுக்கான 5 நாள் திறன்மேம்பாட்டுப் பயிற்சி முகாம், கல்லூரி கருத்தரங்கக்கூடத்தில் இன்று நடைபெற்றது.

இந்த தொடக்க விழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர், செயலர் மற்றும் முனைவர் சிவக்குமார் தலைமை வகித்தார்.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஓமன்நிஸ்வா பல்கலைக்கழக டீன் முனைவர் ஆரோக்கிய சாமி சூசை மாணிக்கம் கலந்து கொண்டு, உள்ளடக்கத் தகவல் குறுந்தகடு வெளியிட்டுப் பேசினார்.

இப்பயிற்சி முகாமில் கல்லூரிப்பேராசிரியர்கள் திரளாகப் பங்கேற்றுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அக மதிப்பீட்டுத் தரக்குழுவினர் கணிதத் துறைத்தலைவர் முனைவர் உமா, பன்னாட்டு வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் பர்வீன்பானு, பி.எஸ்.சி. சி.எஸ்.சி.எஸ். துறைத்தலைவர் முனைவர் கிருஷ்ணபிரியா ஆகியோர் இணைந்து செய்துள்ளனர். இந்த 5 நாள் பயிற்சி முகாமை வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் நிர்மலா தேவி ஒருங்கிணைத்து வருகிறார்.