கோவையில் மகளிருக்கான சிறப்பு பயிற்சி

கோவை மாவட்டத்தில் தேசிய ரூர்பன் சிறப்பு திட்டத்தின் கீழ் மதுக்கரை வட்டாரத்தில் பல்வேறு விதமான பயிற்சிகளை வழங்கி, சமோக பொருளாதார முன்னேற்றுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. மதுக்கரை வட்டாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நேஷனல் ரூர்பன் திட்டத்ஹ்டின் கீழ் பல்வேறு விதமான இளைஞர் திறன் பயிற்சி மற்றும் சுயவேலை வாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அடிப்படை தையல், ஆயத்த ஆடை தயாரிப்பு, டிரைவிங், அழகுக்கலை, விருந்தோம்பல் துறைகளில் முன் அனுபவம் மற்றும் போதிய உட்கட்டமைப்பு வசதி கொண்ட பயிற்சி நிறுவனங்கள், தங்கள் நிறுவனம் பற்றிய முழு விபரங்களுடன் விண்ணப்பிக்கலாம். பயிற்சி தொடர்பான பாடப்பிரிவுகள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயிற்சி உபகரணங்கள் குறித்த விபரங்களை, திட்ட இயக்குனர் மாவட்ட இயக்க மேலாண்மை , இரண்டாவது தளம், கலெக்டர் அலுவலக பழைய கட்டடம் கோவை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.