பன்னாட்டு அரிமா சங்கம் ஆளுநரின் அமைச்சரவை பதவியேற்பு விழா

கோவையில் பன்னாட்டு அரிமா சங்கம் 324 சி (Cabinet Installation) புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் பதவியேற்பு விழா இன்று பி.எஸ்.ஜி.கன்வென்ஷன் அரங்கில் நடைபெற்றது.

இதில் “மகிழ்ச்சி 2022” எனும் தலைப்பில் நடைபெற்ற விழாவை மாவட்ட ஆளுநர் ராம்குமார் தலைமை தாங்கினார். கன்வென்ஷன் கமிட்டி உறுப்பினர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பன்னாட்டு அரிமா சங்க அகில உலக மூன்றாம் துணை தலைவர் ஏ.பி.சிங் கலந்து கொண்டார்.

புதிய அமைச்சர் உறுப்பினர்களுக்கு  பன்னாட்டு இயக்குனர் மதனகோபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் பன்னாட்டு இயக்குனர்கள் சம்பத் குமார், ராமசாமி, முன்னாள் ஆளுநர் பழனிசாமி, கூட்டு மாவட்ட தலைவர் கருணாநிதி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

புதிய அமைச்சரவை நிர்வாகிகளாக முதல் நிலை ஆளுநர் ஜெயசேகரன், இரண்டாம் நிலை ஆளுநராக நித்யானந்தம், செயலாளர் அட்மின் ராஜ்மோகன்,செயலாளர் செயல் ராமலிங்கம்,பொருளாளர் அட்மின் சுப்ரமணியன்,பொருளாளர் திட்டம் கனகராஜ் மற்றும் அனைத்து சேவை திட்ட தலைவர்கள்,மண்டல தலைவர்கள்,வட்டார தலைவர்கள், அரிமா மாவட்டம் செய்தி தொடர்பு அதிகாரி அரிமா செந்தில் குமார் ஆகியோர் பொறுப்பேற்றுக்  கொண்டனர்.

மாவட்ட ஆளுநர் ராம் குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, 324 சி மாவட்ட அரிமா சங்கத்தின் கீழ் 127 அரிமா சங்கங்களில், 6875 உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் புறநகர் பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் ஆறாக்குளம் பகுதியில் சுமார் 13.75 கோடி மதிப்பில் சி.பி.எஸ்.இ.பாடத்திட்ட பிரிவில் அரிமா சங்கம் சார்பாக பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு துவங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்த ஆண்டு புதிதாக 34 சேவை திட்டங்கள் துவக்கி அதில் மாற்றுத்திறனாளிகள்,பள்ளி மாணவ மாணவிகள் என பல்வேறு தரப்பினர் பயன்பெறுவார்கள். இந்த ஆண்டு ஒரு கோடி பயனாளிகளுக்கு இந்த திட்டங்கள் செல்லும் வகையில் இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும்,பசிப்பிணி போக்குவது, குழந்தைகள் புற்றுநோய்,கண்ணொளி திட்டம்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு,நீரிழிவு நோய்,போன்றவற்றில் விழிப்புணர்வு மற்றும் செயல்திட்டங்களை அதிகம் செயல்படுத்த உள்ளதாகவும்  பேசினார்.