காவலர்கள் குடும்பத்தினர்களுக்கான விளையாட்டு போட்டிகள்

கோவை மாநகர ஆயுதப்படை காவலர் மைதானத்தில் காவலர்கள் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டிகளை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

இசை நாற்காலி, சாக்கு ஒட்ட பந்தயம், தண்ணீர் நிரப்புதல் மற்றும் லக்கி கார்ணர் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்களும் அவர்கள் குடும்பத்தாரும் மற்றும் குழந்தைகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.