பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வானதி எம்.எல்.ஏ

கோவை ராமநாதபுரம் தொடக்கப்பள்ளியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் நலம் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். சுங்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி  போட்டுக் கொண்டார்.

பின்னர் கல்வியாளரும், காந்தியவாதியுமான கிருஷ்ணராஜ் வாணவராயரை சந்தித்து பிரதமரின் இல்லம் தோறும் மூவர்ணம் எனும் நாடு தழுவிய நிகழ்வில் பங்கேற்க  அழைப்பு விடுத்து தேசிய கொடியை வழங்கினார்.