கழிவுப்பஞ்சு ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் – ஸ்பின்னிங் மில்கள் சங்கம் கோரிக்கை

ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்கம் (OSMA – Open End Spinning mills Association) நிர்வாகிகள், உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள OE மில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதிய நிர்வாகிகளாக தலைவர் அருள்மொழி ,செயலாளர் சந்திரசேகரன், துணை தலைவர் செந்தில்குமார், பொருளாளர் சேவியர் பிரான்ஸிஸ், இணைசெயலாளர் சுரேஷ்குமார், இணை செயலாளர் பாரதி ஆகியோர் பதவியேற்றனர்.

நிர்வாக குழுவுடன் EC உறுப்பினர்கள் 35 பேர் மண்டலம் வாரியாக அனைத்து பகுதியில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து OSMA நிர்வாகிகள் அனுஷ்ராமசாமி, முருகேசன், அருள்மொழி, சந்திரசேகரன் கூறியதாவது: OE மில்களின் பிரச்சனைகளை உடனுக்குடன் மத்திய மாநில அரசிடம் பேசி தீர்வு காணவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வட இந்திய ரோடார் சங்கத்துடன் பானிபட் இணைந்து செயல்பட்டு மத்திய அரசிடம் OE மில் துறை சம்மந்தமான கோரிக்கை மனுவை அளிப்பது போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காட்டன் கோம்மர் நாயில் பற்றக்குறையாக உள்ளது. OE மில்களின் முக்கிய மூலப்பொருளாக உள்ள கோம்பர் நாயில் காட்டன் கழிவு பஞ்சு, உள்நாட்டு தேவைக்கு போக மீதம் இருந்தால் மட்டுமே ஏற்றுமதிக்கு அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் ஏற்றுமதி வரி கிலோவிற்கு ரூபாய் 20 விதித்து கோம்பர் கழிவு பஞ்சு ஏற்றுமதியை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

கழிவுப்பஞ்சு ஏற்றுமதியை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். அதிகம் இருந்தால் ஏற்றுமதி செய்யலாம். ஆனால் இங்கேயே பற்றாக்குறை உள்ளது. கோவையில் இதன் பற்றாக்குறை காரணமாக கோவையிலேயே சில மில்கள் மூடப்பட்டுள்ளன.

மறுசுழற்சி என்ற முறையில் OE மில்களில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைபர், கார்மெண்ட் கட்டிங் வேஸ்ட் பழைய துணி வகைகள் ஆகியவற்றில் இருந்து 40க்கும் மேற்பட்ட கலர் நூல் உற்பத்தி செய்யப்பட்டு ஏழை மக்கள் பயன்படுத்தும் வகையில் குறைந்த விலையில் பெட்சீட், தலையணை உறை, காடா துணிகள், திரை துணிகள், மிதியனை, நைட்டி உள்ளிட்ட பொருட்களை தயாரிப்பதற்கான நூல்கள், ஜவுளி பொருட்கள் OE மில்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.