ப்ரோசோன் மால் 5 ஆம் ஆண்டு விழா சிறப்பு சலுகைகள் அறிவிப்பு

கோவை சரவணம்பட்டியில் இயங்கி வரும் ப்ரோசோன் மாலின் ஐந்தாம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி புகழ் சூப்பர் சிங்கர் ஆனந்தாக்ஷன், நித்யஸ்ரீ குழுவினரின் இன்னிசை மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

ஐந்தாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ப்ரோசோன் மாலில் எழுபதுக்கும் மேற்பட்ட பிராண்டுகள் Flat 50% சிறப்பு சலுகை வழங்குகின்றன. இச்சிறப்பு சலுகை ஜூலை 24 வரை மட்டுமே.

இன்று மாலை விஜய் தொலைக்காட்சி புகழ் அறந்தாங்கி நிஷா, சூப்பர் சிங்கர் தன்ய ஸ்ரீ மற்றும் கௌசிக் குழுவினரின் கலை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும், Foot Loose குழுவினரின் பேஷன் ஷோவும் நடைபெற உள்ளது.

நாளை மாலை சிறப்பு நிகழ்ச்சியாக விஜய் தொலைக்காட்சி பிரபலம் புகழ் மற்றும் மதுரை முத்துவின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.