பொள்ளாச்சி நவமலையில் பேருந்தை வழிமறித்த யானை கூட்டம்!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் பகுதிக்கு உட்பட்ட நவமலைக்கு அரசு பேருந்து தினசரி ஐந்து முறை சென்று வருகிறது.

அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள், மின்சார ஊழியர்கள், பள்ளி குழந்தைகள் பேருந்தில் பயணம் செய்கின்றனர்.

இன்று காலை பொள்ளாச்சியில் இருந்து நவமலை நோக்கி அரசு பேருந்து சென்ற போது வனப்பகுதியை விட்டு வெளியே சாலையின் குறுக்கே யானை கூட்டம் வழிமறித்தது. பயணிகள் வனத்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் வனத்துறையினர் யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர். பேருந்தில் பயணம் செய்த பயணி எடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.