2,000 பணியாளர்களை நியமிக்க ‘சோஹோ’ திட்டம்

பல பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்ற நேரத்தில், Zoho நிறுவனம் ஊழியர்களை பணியமர்த்துவதாக அறிவித்துள்ளது.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Zoho Corp பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு மேம்பாடு ஆகியவற்றில் குறைந்தது 2,000 பணியாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது.

ZOHO மென்பொருள் நிறுவனம் உருவாக்குநர்கள், தர மதிப்பீட்டு பொறியாளர்கள், வலை உருவாக்குநர்கள், வடிவமைப்பாளர்கள், தயாரிப்பு விற்பனையாளர்கள், எழுத்தாளர்கள், தொழில்நுட்ப ஆதரவு பொறியாளர்கள் மற்றும் விற்பனை நிர்வாகிகளை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

ஜோஹோவின் தயாரிப்புகள், வரி, கணக்கியல் மற்றும் ஊதியத் தலைவரான பிரசாந்த் காந்தி இது குறித்து கூறுகையில்: திறமை இருக்கும் இடத்தில் இருந்து நிறுவனங்கள் வாய்ப்புகளை எடுத்துக்கொண்டு திறமையை மேம்படுத்துவதில் முதலீடு செய்ய வேண்டும்.

மேலும் ZOHO இந்தியாவில் கிராமப்புறங்களில் உள்ள திறமைகளை கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நகரங்களில் உள்ள பெரும்பாலான திறமையாளர்கள் கிராமங்கள் மற்றும் சிறு நகரத்தில் இருந்து வருவதாகவும், ஜோஹோ ஸ்கூல்ஸ் ஆஃப் லேர்னிங் போன்ற மேம்பாட்டுத் திட்டங்களை இந்த இடங்களில் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.