மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

 – மாவட்ட ஆட்சியர்  சமீரன்

கோவை  மாவட்டத்தில் ஆட்சியர்  அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியர்  சமீரன், இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

இது தொடர்பாக இலவச வீடு வேண்டி 63 மனுக்களும், வீட்டுமனைப்பட்டா வேண்டி 141 மனுக்களும், வேலைவாய்ப்பு வேண்டி 20 மனுக்களும், 136 இதர மனுக்கள் என மொத்தம் 360 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர். அதன் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

மேலும், இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலாஅலெக்ஸ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராம்குமார்,  மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமாரி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.