தமிழ்நாட்டின் சிறப்புகளின் கண்காட்சி

தமிழகத்தில் இன்று தமிழ்நாடு திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நில அளவை துறையின் சார்பில் தமிழ்நாடு திருநாள் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில், தமிழ்நாடு என பெயர் சூட்டுவதற்கு முன் மெட்ராஸ் என இருந்தது. அப்போது இருந்த நில வரைபடங்கள், தமிழ்நாட்டின் சிறப்புகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 1806ம் ஆண்டு சர் வில்லியம் லாம்பிடன் சென்னை மற்றும் கோவையில் ஆய்வு மேற்கொண்ட ஓவியங்கள், பழங்காலத்தில் உபயோகிக்கப்பட்ட நில அளவை கருவிகளின் புகைப்படங்கள் ஆகியவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதனை, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பார்வையிட்டார்.