கொடிசியாவில் அக்ரி இன்டெக்ஸ் வேளாண் கண்காட்சி துவக்கம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் மற்றும் கொடிசியா இணைந்து நடத்தும், 20 வது ‘அக்ரி இன்டெக்ஸ் – 2022’ கண்காட்சி இன்று துவங்கியுள்ளது. ஜூலை 18 வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

இதனை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டு, அக்ரி இன்டெக்ஸ் – 2022 புத்தகத்தை வெளியிட்டனர்.

நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது: இக்கண்காட்சிக்கு அதிகமான விவசாயிகள் வருகை தந்துள்ளனர். விவசாயத்தில் முன்னேறவேண்டும் என்ற எண்ணம் அனைத்து விவசாயிகளிடமும் உள்ளது. மேலும், வேளாண் தொழில் நிறுவனங்கள் மூலம் விவசாயம் சார்ந்த தொழில்நுட்ப பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வெளி மாவட்டங்கள், கிராமங்களில் உள்ள விவசாயிகள் கண்காட்சி வருகை தருகின்றனர்.

தற்போது விவசாயம் கூலி வேலைக்கு ஆட்கள் குறைவாக உள்ளனர். எனவே, விவசாயம் தொழில் சார்ந்த , தொழில்நுட்ப கருவிகள், விவசாயத்தை நவீனமாயமக்குதல் உள்ளிட்டவை பற்றி அறிந்து கொள்ள இக்கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் சார்பில் புதிய வேளாண் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த புதிய கண்டுபிடிப்புகள் பொதுமக்களிடமும், விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பதற்கு இதுபோன்ற கண்காட்சி மிகவும் உபயோகமாக உள்ளது.

இக்கண்காட்சியானது விவசாயிகளிடத்தில் நம்பிக்கையை ஊட்டுகின்றன. 5 ஆண்டுகளில் அனைத்து ஊராட்சிகளிலும் விவசாயம் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன். ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதன் மூலம் 3 முதல் 4 லட்சம் ஏக்கர் இடங்களில் கூடுதலாக விவசாயம் செய்யும் வாய்ப்பினால், உற்பத்தி அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் பிரதாப், தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக துணை வேந்தர் கீதாலெட்சுமி, மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன், கொடிசியா தலைவர் திருஞானம், கொடிசியா செயலாளர் ஷசிகுமார், அக்ரி இன்டெக்ஸ் சேர்மன் கிருஷ்ணராஜ், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.