தற்கொலை செய்து கொள்ளும் பறவைகள்!

இவ்வுலகில் உள்ள மனிதர்கள் மன உளைச்சல் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பல பிரச்சனைகள் காரணமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். அதே போல் பறவைகளும் கூட்டம் கூட்டமாய் தற்கொலை செய்து கொள்கின்றது என்றால் நம்புவீர்களா?

மர்மம் நிறைந்த இவ்வுலகில் தெளிவுபடுத்தப்பட  முடியாத சில விஷயங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்தியாவில்  அசாம் மாநிலத்தில்  அமைந்துள்ள சகார் பிரதேசத்தில்  ஜதிங்கா  என்ற கிராமம் உள்ளது.  இப்பகுதி உலக பிரசித்திபெற்ற சுற்றுச்சூழல் தளமாக விளங்குகிறது.

இந்த கிராமத்தில் காஸி இன  பழங்குடியின மக்கள்  வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மனிதனைப்போல் பறவைகளும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம்  வரை  கூட்டம் கூட்டமாய் பறந்தபடியே தற்கொலை செய்துகொள்ளும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.

பறவைகள் தற்கொலை செய்வதாக கூறப்பட்டாலும் இந்த மர்ம மரணங்களுக்கு பல காரணங்களும் கூறப்படுகின்றன. இப்பறவைகள் இரவு 7 மணி முதல் 10 மணிவரை மட்டுமே தற்கொலை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இவ்வாறு தற்கொலை செய்வதை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு டவர் ஒன்றும் அங்கு பொருத்தப்பட்டுள்ளது.

இப்பறவைகள் ஏன் தற்கொலை செய்து கொள்கின்றது என இன்னும் அறியப்படவில்லை. ஆனால் அறிவியல் ஆய்வு ஒன்றில் பறவைகள் உண்மையாகவே தற்கொலை செய்து கொள்வதில்லை என்றும் பறவைகள் அதிகமாக மனிதர்களால் கொல்லப் படுகின்றன எனவும் கூறப்படுகிறது.

 

Story by: Sowndharya