ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்ற 94 வயது பாட்டி

ஃபின்லாந்தில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 94 வயது பஹ்வானி தேவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

35 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கான தடகளப் போட்டித் தொடர், ஃபின்லாந்தின் டாம்பயர் நகரத்தில் ஜூன் 29 முதல் ஜூலை 10 வரை நடைபெற்றது.

பஹ்வானி தேவி 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை 24.74 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார்.
மேலும் குண்டு எறிதல், வட்டு எறிதல் போட்டிகளில் அவர் வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளார். மொத்தமாக மூன்று பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கிறார். ஃபின்லாந்திலிருந்து டெல்லி திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

விளையாட்டுத் துறை, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், விளையாட்டில் சாதனை புரிவதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை பகவானி தேவி நிரூபித்துள்ளார். உண்மையிலேயே பாராட்டுக்குரிய முயற்சி என ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.