செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான
டிக்கெட் விற்பனை இன்று முதல் துவக்கம்

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் ஜூலை 29 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுவரை இந்தப் போட்டி இந்தியாவில் ஒருமுறை கூட நடைபெற்றதில்லை. இப்போது 44வது செஸ் ஒலிம்பியாட் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிக்கு வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 200 நாடுகளிலிருந்து 2000 க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர். இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேரில் காண்பதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளது.

இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை அறிவிப்பை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. tickets.aicf.in என்ற இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 200 ரூபாயிலிருந்து 8000 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள், 19 வயதுக்கு உட்பட்டவர்கள், பெண்கள், தமிழக அரசு ஊழியர்களுக்கு டிக்கெட் கட்டணம் 2 மணி நேரத்திற்கு 200 மற்றும் 300 ரூபாய்.

ஒரு நாள் முழுவதும் போட்டியை பார்க்கும் இந்தியர்களுக்கு டிக்கெட் கட்டணம் ரூ.2000 மற்றும் 3000.

ஒரு நாள் முழுவதும் போட்டியை பார்க்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு டிக்கெட் கட்டணம் 6000 மற்றும் 8000 ரூபாய்.