கே.பி.ஆர் பொறியியல் கல்லூரிக்கு
‘கிராமப்புற மேம்பாட்டு சிறப்பு விருது’

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிக்கு அண்மையில் புதுடெல்லியில் நடைபெற்ற கிராமப்புற மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு உச்சி மாநாடு மற்றும் விருதுகள் 2022 வழங்கும் விழாவில் சிறந்த சி.எஸ்.ஆர் முன்முயற்சிகள் பிரிவில் ‘கிராமப்புற மேம்பாட்டு சிறப்பு விருது’ வழங்கப்பட்டது.

மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் கௌஷல் கிஷோர் இவ்விருதினை கல்லூரியின் பேராசிரியர்களிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சி மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சர் சாத்வி நிர்ஜன் ஜோதி முன்னிலையில் நடைபெற்றது.

இது பற்றி கல்லூரி முதல்வர் அகிலா கூறுகையில்: இந்த விருதுகள் கிராமப்புற சேவையில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டது. கே.பி.ஆர் பொறியியல் கல்லூரிக்கு இவ்விருது கிடைத்தது தமக்கு பெருமை அளிப்பதாக கூறினார்.

மேலும், இது இக்கல்லூரி தொடர்ந்து கிராமப்புற மேம்பாட்டிற்கு செய்துவரும் சேவைக்கான அங்கீகாரம், மற்றும் தொடர்ந்து இச்சேவையை சிறப்பாக செய்ய இவ்விருது ஊக்குவிப்பதாக அமையும் என்றார்.

கல்லூரியின் தலைவர் கே.பி.ராமசாமி இந்த சேவையில் சிறப்பாக செயலாற்றி வரும் ஆசிரியர்களையும், மாணவர்களையும் பாராட்டி வாழ்த்தினார்.