கோத்தபய ராஜபக்சே இலங்கையில் தான் இருக்கிறார்

– சபாநாயகர் விளக்கம்

ராஜினாமா செய்வதாக கூறிய அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்னும் இலங்கையில் தான் இருப்பதாக சபாநாயகர் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துக்கொண்டுருக்கும் இலங்கையில், சில மாதங்களாகவே மக்களின் போராட்டம் வெடித்தது.  இதையடுத்து, மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை  ராஜினாமா செய்தார்.  இவரைத்தொடர்ந்து  இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே  பதவியேற்றார். ஆனால், ரணில் விக்ரமசிங்கேவும்  பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க எந்த  நடவடிக்கைகளையும்  எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டு எழுந்து வருகின்றது.

இதன் தொடர்பாக,  அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இலங்கை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

இதனிடையே,  சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற அனைத்து கட்சியின் அவசர கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உடனே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, ரணில் விக்கிரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே வரும்  13ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார். இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தா அறிவிப்பு வெளியிட்டார்.  இதனால், கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்வதற்கான கடிதத்தில் கையெழுத்திட்டு அதிகாரி ஒருவரிடம் கோத்தபய ராஜபக்சே கொடுத்துள்ளார்.  அதன்படி, கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ததற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சபாநாயகர் நாளை வெளியிடவுள்ளார்.

மேலும், கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து வெளியேறி அண்டை நாட்டுக்கு தப்பி சென்றுள்ளதாக நேற்று மாலை ஒரு தகவல் வெளியானது. அவர் இந்தியா, சீனா, பாகிஸ்தானுக்கோ சென்றிருக்கலாமென்று பேசப்படுகிறது.

இந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து வெளியேறியதாக வெளியான தகவல் உண்மையில்லை என இலங்கை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தா மறுப்பு தெரிவித்துள்ளார். கோத்தபய ராஜபக்சே இலங்கையில்தான் இருக்கிறார் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.