கோவையில் வரும் ஜூலை 16 உழவே தலை நிகழ்ச்சி

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை நான்காம் ஆண்டாக ‘உழவே தலை’ எனும் ஒருநாள் வேளாண் கருத்தரங்கை நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் ஜூலை 16 ஆம் தேதி நடத்த உள்ளது.

மரம் விவசாயத்திற்கு எப்படி முக்கியமானது, தென்னை தவிர வேறு மரங்கள் சாகுபடி செய்வது, அதன் மூலம் வளம் பெருக்குவது, அதற்குண்டான பயிற்சி மற்றும் பல சிறப்பம்சங்கள் குறித்து வல்லுநர்கள் இந்நிகழ்வில் உரையாற்ற உள்ளனர்.

உரை ஆற்றுபவர்கள்

பாலமோகன் – தோட்டக்கலையில் பழ வகை மரங்களின் பலன்கள் அதற்குண்டான சந்தை பற்றி கூற இருக்கிறார்.

பாலசுப்பிரமணியம் – மண்வளம், நீர்வளம், சரியான மர வகையை தேர்ந்தெடுப்பது, குறுகிய கால மரங்கள் பற்றி உரையாற்ற இருக்கிறார்.

கென்னடி – பழங்களை வளர்ப்பதும், சந்தைப்படுத்துவதும் பற்றி விளக்குவார்.

சரவணன் – மரங்கள் விவசாயத்துக்கு இடையூறு இல்லை என்பதை விளக்க இருக்கிறார்.

மணி சுந்தர் – மரங்களை வளர்ப்பதற்கு உண்டான பொருளாதார ஆலோசனைகளை விவசாயத்திலிருந்து பெருக்குவதை பற்றி விளக்குவார்

ராமன் – பணம் தரும் மரங்களை பற்றி விளக்குவார்

இந்த ஒரு நாள் கருத்தரங்கம் பெரிய விழிப்புணர்வை மரம் வளர்ப்பு மற்றும் அதன் பலன்கள் பற்றி அறிந்து கொள்ள உதவிகரமாக இருக்கும் என இந்திய தொழில் வர்த்தக சபை கோவை பத்திரிகை செய்தி வாயிலாக தெரிவித்துள்ளது.