கால் மேல் கால் போட்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்

கொஞ்ச கூட மரியாதையில்லாம, பெரியவங்க முன்னாடி இப்படி கால் மேல் கால் போட்டு உட்காந்துட்டுருக்க. என்ன கெட்ட பழக்கம் இது? இப்படியெல்லாம் நாம திட்டு வாங்கியிருப்போம். ஆனால், முன்னோர்கள் சொன்னது எல்லாமே அறிவியல் ரீதியான உண்மை தான். யாரு தான் உண்மையை சொன்னா கேட்க போறாங்க?

கால் மேல் கால் போட்டு உட்காருவதால் ஒரு கம்பீரமாக தான் இருக்கும். இது ஒரு நல்ல தோற்றத்தை ஏற்படுத்தினாலும் உடலளவில் ஆபத்துகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அறிவியல் கூற்றின் படி, கால் மீது கால் போட்டு அமர்வது உடல்நலனுக்கு கேடு விளைவிக்கிறது எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சில பேருக்கு தியேட்டர், ரெஸ்டாரென்ட் போன்ற பொது நிகழ்வுக்கு சென்றால் கூட, கால் மேல் கால் போட்டு உட்காரும் பழக்கம் இருக்கும். இப்படி உட்காருவதை நிறைய பேர் செளகரியமாக உணர்கிறார்கள். ஆனால், உண்மையில் அப்படி உட்காருவது நிறைய பிரச்சனைகள் அளிக்கிறது.

கால் மேல் கால் போட்டு உட்காருவது அந்த நேரத்திற்கு சௌகரியமாக இருந்தாலும், உடலுக்கு இது அசௌகரியமான விஷயம். எனவே, இப்படி உட்காரும் போது இடுப்பு மற்றும் கீழ் முதுகிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு முதுகு வலி உண்டாகும். இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். முழங்கால் பிரச்சனைகள் மற்றும் உணர்வின்மை ஏற்படும்.

இப்படி அமரும் போது நாம் நேராக அமராமல் உடலை வலைத்து சீரற்ற அமைப்பில் அமர்ந்திருப்போம். இதனால், முதுகுத் தண்டு பாதிக்கப்பட்டு உடலமைப்பே மாறிவிடும். ஒரு கால் மேல் மற்றொரு காலை போடும்போது காலில் சில நரம்புகள் தடுக்கப்பட்டு, இரத்த ஓட்டம் மெதுவாக நடக்கிறது. இதனால் ஆங்காங்கே இரத்தம் உறைந்துபோகக் கூடும்.

ஒரு காலை கீழே ஊன்றி மற்றொரு காலை மேலே வைப்பதால் கீழே ஊன்றும் ஒரு கால் வழியாக மட்டுமே இரத்தம் அழுத்தப்பட்டு ஒரு பக்கமாக பாய்கிறது. ஆனால், ஒரு காலுக்கு அழுத்தம் இல்லாததால் இரத்த அழுத்தம் ஏற்படும்.

கர்ப்பிணிகள் இப்படி உட்காருவது குழந்தைக்கு பாதிப்பு இல்லை என்றாலும், இதனால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தசை பிடிப்பு, முதுகு வலி, கணுக்கால் வலி போன்ற பிரச்னைகளை சந்திப்பார்கள். இப்படியே தொடர்ந்து உட்காரும் பழக்கம் இருந்தால் முட்டி வலி ஏற்படும்.

நீண்ட நேரம் கால் மீது கால் போட்டு உட்காருவது, இடுப்பின் சமநிலையை பாதிக்கிறது. இதனால், தசை சார்ந்த பிரச்சனைகளும் உண்டாகலாம். சிலந்து போல நரம்புகள் கால்களில் தென்படுவதை ஸ்பைடர் வெயின். கால் மீது கால் போட்டு அதிக நேரம் உட்காருவதால் இந்த ஸ்பைடர் வெயின் பிரச்சனை உண்டாக்கலாம்.

ஒரு நாளில் மூன்று மணி நேரத்திற்கும் மேல் நீங்கள் கால் மீது கால் போட்டு உட்காருவதால். முதுகு வலி, கழுத்து வலி, இடுப்பில் அசௌகரியமான உணர்வு போன்றவை உண்டாகிறது. எனவே, முடிந்த வரை இனிமேல் கால் மீது கால் போட்டு அமர்வதை தவிர்த்துவிடுங்கள்.