‘போலாம் ரைட்’ நிகழ்ச்சி:
மாணவர்களுடன் கோவை ஆட்சியர் கலந்துரையாடல்

கோவை பெரியநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சியில் நான் முதல்வன் திட்டத்தின் ஒருபகுதியாக ‘போலாம் ரைட்’ நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், தொண்டாமுத்தூர்
அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, குருடம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அரசு பள்ளி மாணவ மாணவியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்கள் தங்களுக்குள்ள தனி திறமைகள், எதிர்கால கனவுகள், பிடித்தமான படிப்புகள், விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மாவட்ட ஆட்சியருடன் பகிர்ந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி முடிவுற்ற பின்னர் குருடம்பாளையம் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்தல், கழிவு செய்யப்பட்ட காய்கறிகயிலிருந்து உரம் தயாரித்தல் உள்ளிட்டவைகள் குறித்து செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.