சூரியனை கண்டித்து தாமரை உண்ணாவிரத போராட்டம்

திமுக அரசை கண்டித்து பாஜக இன்று சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டு கடந்த பின்னும், இன்னும் திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் தெரிவித்து தமிழக பாஜக சார்பில் இன்று காலை 10 மணிக்கு துவங்கியது.

மு.க.ஸ்டாலின் தொகுதியான வட சென்னையில் உள்ள கொளத்தூர் தொகுதியில் போராட்டம் நடத்தப்படுவதாகவும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடத்துவதாகவும் திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற்கு திருவள்ளுவர் போலீசார் அனுமதி தர மறுக்கப்பட்டது.

இதே போல், ஏழு இடங்களில் தனித்தனியாக போராட்டம் நடத்துவதற்கு பதிலாக, ஒரே இடத்தில் போராட்டம் நடத்தும் படி போலீசார் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

இதனையடுத்து, சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தின் அருகே, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.