மிஸ் இந்தியா 2022: மகுடத்தை வென்றார் சினி ஷெட்டி!

2022ஆம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா போட்டியில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சினி ஷெட்டி மகுடத்தை தட்டி சென்றுள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு மிஸ் இந்தியா மகுடம் சூட்டி கவுரவித்தார்.

நாடு முழுவதுமிருந்து 31 பேர் இந்த போட்டிக்கு இறுதியாக தேர்வு செய்யப்பட்டனர். மும்பையில் நேற்று இறுதிப் போட்டி நடந்தது. இதில் முதல் மூன்று இடங்களில் கர்நாடகாவைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் சினி ஷெட்டி, முதலிடம் பிடித்து மிஸ் இந்தியாவாக மகுடம் சூட்டிக் கொண்டார்.

இதில் மொத்தம் மூன்று வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களுக்கு ராஜஸ்தானை சேர்ந்த ரூபல் ஷெகாவத் மற்றும் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஷினதா சவுஹான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.